Booking
Back
Back
Nayanthara teams up with the latest sensational director
06-02-2018
குறும் படங்கள் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பது என்பது சமீபத்திய ட்ரெண்ட். அந்த வகையில் சமீபமாக லட்சுமி, மா ஆகிய குறும் படங்கள் மூலம் அனைவரையும் ஈர்த்த இயக்குனர் சர்ஜுன், ஒரு தாய் அன்பின் வெளிப்பாடை அற்புதமாக காட்டிய 'Maa' மூலம் அனைத்து தரப்பிலும் பெருமளவு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் பெற்று வருகிறார். இந்த வெற்றி, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் அடுத்த படத்தை இயக்கம் வாய்ப்பை சார்ஜூனுக்கு பெற்றுத்தந்துள்ளது என்பதே தற்பொழுதைய பரபரப்பு செய்தி. இந்த படத்தை 'KJR ஸ்டுடியோஸ்' ராஜேஷ் தயாரிக்கவுள்ளார். 'அறம்' என்ற தரமான படத்தை தந்தவர் ராஜேஷ் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒரு தரமான தயாரிப்பாளர்- திறமையான இயக்குனர்- உச்ச நட்சத்திரத்தின் கூட்டணி வணிக தரப்பில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து இயக்குனர் சர்ஜுன் பேசுகையில் , '' வாய்ப்பு தேடி அலையும் இயக்குனர்களுக்கு குறும்படங்கள் நல்ல பாதையாகும். எனது முதல் படமான 'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' படத்தின் படப்பிடிப்பு நடந்துக்கொண்டிருக்கும் இந்நிலையில் எனது 'Maa' குறும்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் 'KJR ஸ்டுடியோஸ்' ராஜேஷ் சார் அவர்கள் எனக்கு போன் செய்து என்னிடம் ஏதாவது சுவாரஸ்யமான கதையுள்ளதா என கேட்டார். உடனே நான் தயார் செய்துள்ள ஒரு கதையை அவரிடம் சொன்னேன். அது நயன்தாரா மேடமுக்காக என்பது எனக்கு அப்பொழுது தெரியாது. பிறகு அவர் என்னிடம் இக்கதையை நயன்தாரா மேடமும் என்று கூறியபொழுது மிகவும் சந்தோஷப்பட்டேன். கதையை கேட்டு மிகவும் ரசித்தார் நயன்தாரா மேடம். இது ஒரு உணர்ச்சிப்பூரமான திகில் படம். இந்த கதையை நான் எழுதிய பொழுது ஒரு பெரிய நடிகர் இதில் நடித்தால் மிக பொருத்தமாக இருக்கும் என நினைத்தேன். தற்பொழுது நயன்தாரா மேடம் போன்ற ஒரு உச்ச நட்சத்திரம் மற்றும் அருமையான நடிகர் கிடைத்திருப்பதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி. எனது 'Maa' குறும்படத்தை அவர் பார்த்ததாகவும் அதன் கதையும் மற்றும் அதனை எடுத்த விதமும் அவருக்கு பிடித்திருந்ததாகவும் நயன்தாரா மேடம் என்னிடம் கூறினார். நயன்தாரா மேடமும் தயாரிப்பாளர் ராஜேஷ் சாரும் என் மீதும் எனது கதையின் மீதும் வைத்திருக்கும் நம்பிக்கையை நிச்சயம் ஒரு தரமான படத்தை தந்து காப்பாற்றுவேன் ''.

இளையதிலகம் பிரபு இண ...

மில்லியன் டாலர் மூவிஸ் சார்பாக K.கார்த்திக்கேயன் தயாரிக்கும் ராமகிருஷ்ணன் இயக்கத்த ...

Read More »

லக்ஷ்மி ராமகிருஷ்ணன ...

முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'! பன்முக திறமையாள ...

Read More »

மிஸ்டர் சந்திரமௌலி

கிரியேட்டிவ் மீடியா எண்டர்டெயினர்ஸ் உடன் இணைந்து பாஃப்டா மீடியா வொர்க்ஸ் சார்பில் த ...

Read More »

அசுரவதம்

7 ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் தயாரிப்பில் சசிகுமார், நந்திதா ஸ்வேதா நடிப்பில் மதுதுபாண் ...

Read More »

ஸ்ருதிஹாசன் தயாரிக் ...

ஸ்ருதிஹாசன் தயாரிக்கும் ‘த மஸ்கிட்டோ பிலாஸபி ’ தனது சொந்த நிறுவனமான இஸிட்ரோ மீட ...

Read More »

மகாத்மாவை பாதசாரிகள ...

***வீரத்துக்கு உதாரணம் டிராஃபிக் ராமசாமி : கமல்ஹாசன் பாராட்டு! ***மகாத்மாவை பா ...

Read More »

வட சென்னை

தனுஷ் நடித்துள்ள " வட சென்னை " படத்தின் ட்ரைலர் ஜூலை 28 ஆம் தேதி வெளியாக ...

Read More »

நடிகர் ஷரண்

கோலிவுட்டில் வந்து பிறக்கும் இயக்குனர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். ஒவ்வொரு வாரமு ...

Read More »

காளி மே 18ஆம் தேதி ...

www.cinemaabc.ch #cinemaabc விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் ஃபாத்திமா விஜய் ஆ ...

Read More »

ஒரு தலைமுறையை வாசிக ...

www.cinemaabc.ch #cinemaabc ஒரு தலைமுறையை வாசிக்க வைத்தவர் பாலகுமாரன் கவிஞர் ...

Read More »

Company
: ABC cine gmbh
Contact person
: Balachandran
Email
Website
moserstrasse 24
CH-3014
Bern
Telephone
: +41 313324142
: +41 313313030
Mobile
: +41 793565617
Designed by Right Design. © 2016 cinemaabc.ch All rights reserved.