Booking
Back
Back
மீண்டும் நீயா2 ஜெய் ஜோடியாக வரலட்சுமி
06-03-2018
மீண்டும் “நீயா2” ஜெய் ஜோடியாக வரலட்சுமி – ராய்லட்சுமி – கேத்ரின் தெரேசா. கமல்ஹாசன் – ஸ்ரீப்ரியா நடிப்பில் 1979 – ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான படம். “நீயா“ இன்று வரை ஹிட்டான ஹாரர் மூவி படங்களுக்கு “நீயா” ஒரு முன் உதாரணம் என்று சொல்லலாம். மீண்டும் 39 – வருடங்களுக்கு பின் அதே பெயரில் “நீயா2” படம் பிரமாண்டமாக தயாராகிவருகிறது . கதைக்கு தேவைப்பட்டதால் “நீயா2” என்று பெயர் வைத்துள்ளேன் என்கிறார், இதன் இயக்குநர் L.சுரேஷ் . இதில் ராஜநாகம் பாம்பு முக்கிய அங்கம் வகிக்கிறது. 22 – அடி நீளம் கொண்ட இந்த ராஜநாகம் படம் முழுக்க இடம்பெறும்கிறது. இதன் தோற்றத்தை முடிவு செய்ய நானும் கேமராமேனும் இந்தியா , தாய்லாந்து நாடுகளில் தேடினோம். இறுதியாக பேங்காக்கில் ஒரு ராஜநாகத்தை பார்த்தோம். அதன் அமைப்பு , உடல்மொழி , தன்மை என அனைத்தையும் பார்த்தும், கேட்டும் தெரிந்துகொண்டோம். படம் முழுக்க வருவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் விதமாக இதன் காட்சிகள் அமைந்துள்ளது. படத்தின் நாயகனாக ஜெய் நடிக்கிறார். வித்தியாசமான வேடம் அவருக்கு . இரண்டு வித பரிமாணத்தில் கண்டிப்பாக அசத்துவார். பாம்பு பெண்ணாக வரலட்சுமி நடிக்கிறார், மேலும் ராய்லட்சுமி , கேத்தரின் தெரேசா நாயகியாக நடிக்கிறார்கள். இவர்களுடன் பாலசரவணன் மற்றும் பலர் நடிக்கும் இதன் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைப்பெற்றது. தொடர்ந்து , தலக்கோணம் , சென்னை , மதுரை , கொடைக்கானல் , சாலக்குடி பகுதிகளில் நடைபெறும். அழுத்தமான காதல் கதையுடன் காமடி கலந்த ஹாரர் படமாக சுமார் 10 – கோடி ரூபாய் செலவில் உருவாகும் இப்படத்தை ஜம்போ சினிமாஸ் சார்பில் A.ஸ்ரீதர் தயாரிக்கிறார். திரையுலகில் பலவருடங்கள் தயாரிப்பு துறையில் அனுபவம் பெற்ற இவர் தயாரிக்கும் முதல் படம் இது. கதை – திரைக்கதை – வசனம் – இயக்கம் – ட. சுரேஷ். இவர் “எத்தன்” படத்தை இயக்கியவர். இசை : ஷபிர் ஒளிப்பதிவு : இராஜவேல் மோகன். எடிட்டிங் : சௌமி கிருஷ்ணன் கலை : ஐயப்பன் ஸ்டண்ட் : ஸ்டண்ட் ஜிஎன் நடனம் : கலா , விஜி பாடல்கள் : கபிலன் , பவன் மித்ரா , மோகன்ராஜ் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் : ஆக்சல் மீடியா (ACCEL MEDIA) மக்கள் தொடர்பு : ஜான்சன்.​​

மிஸ்டர் சந்திரமௌலி

கிரியேட்டிவ் மீடியா எண்டர்டெயினர்ஸ் உடன் இணைந்து பாஃப்டா மீடியா வொர்க்ஸ் சார்பில் த ...

Read More »

அசுரவதம்

7 ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் தயாரிப்பில் சசிகுமார், நந்திதா ஸ்வேதா நடிப்பில் மதுதுபாண் ...

Read More »

ஸ்ருதிஹாசன் தயாரிக் ...

ஸ்ருதிஹாசன் தயாரிக்கும் ‘த மஸ்கிட்டோ பிலாஸபி ’ தனது சொந்த நிறுவனமான இஸிட்ரோ மீட ...

Read More »

மகாத்மாவை பாதசாரிகள ...

***வீரத்துக்கு உதாரணம் டிராஃபிக் ராமசாமி : கமல்ஹாசன் பாராட்டு! ***மகாத்மாவை பா ...

Read More »

வட சென்னை

தனுஷ் நடித்துள்ள " வட சென்னை " படத்தின் ட்ரைலர் ஜூலை 28 ஆம் தேதி வெளியாக ...

Read More »

நடிகர் ஷரண்

கோலிவுட்டில் வந்து பிறக்கும் இயக்குனர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். ஒவ்வொரு வாரமு ...

Read More »

காளி மே 18ஆம் தேதி ...

www.cinemaabc.ch #cinemaabc விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் ஃபாத்திமா விஜய் ஆ ...

Read More »

ஒரு தலைமுறையை வாசிக ...

www.cinemaabc.ch #cinemaabc ஒரு தலைமுறையை வாசிக்க வைத்தவர் பாலகுமாரன் கவிஞர் ...

Read More »

சுரேஷ் காமட்சி பரபர ...

“மூத்த நடிகர்களின் ரசிகர்கள் தான் போராட்டங்களை விமர்சிக்கிறார்கள்” ; ‘காவிரி’ ஆல்பம ...

Read More »

நரை

K7ஸ்டுடியோஸ் பெருமையுடன் வழங்கும் “நரை” வெவ்வேறு காரணங்களுக்காக குடும்பத்தினரால ...

Read More »

Company
: ABC cine gmbh
Contact person
: Balachandran
Email
Website
moserstrasse 24
CH-3014
Bern
Telephone
: +41 313324142
: +41 313313030
Mobile
: +41 793565617
Designed by Right Design. © 2016 cinemaabc.ch All rights reserved.