Booking
Back
Back
சூர்யா பரபரப்பு பேச்சு
07-05-2018
நூலகம் இல்லாத இடத்தில் கூட டாஸ்மாக் கடை உள்ளது - சூர்யா பரபரப்பு பேச்சு அறம் செய்ய விரும்பு புத்தக வெளியீட்டு விழா நேற்று சென்னை அண்ணா நூலகத்தில் வைத்து நடைபெற்றது. இதில் நடிகரும் அகரம் கல்வி அறக்கட்டளையின் நிறுவனருமான சூர்யா , திரு. உதயசந்திரன் ஐஏஎஸ் , ராஜகோபாலன் , சா. மாடசாமி , பத்ரிகையாளர் சமஸ் , திரு. கல்விமணி ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி கல்வித்துறை செயலர் திரு. உதயசந்திரன் ஐஏஎஸ் நூலை வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்தினார். விழாவில் நடிகர் சூர்யா பேசியது : கல்வி தாகத்தோடு இருப்போருக்கு எல்லாம் வெளிச்சத்தை கொடுப்பது அகரம்.2006 ல் பேட்சில் இருந்த அகரம் இதை சேவையாக பார்க்காமல் ஒரு கடமையாக இருக்க வேண்டும் என்று செய்து வருகிறது. முதல் தலைமுறை மாணவர்கள்,தன் தாய்,தந்தை படிப்பறிவு இல்லாமல்,படிக்க தேவையான புத்தகம்,பேனா போன்றவற்றை வாங்க முடியாமல் தவிக்கும் குழந்தைகளுக்காகவே ஆரமிக்கப்பட்டது தான் இந்த அகரம்.இது போல் படி படியாக பலவற்றை கூறலாம்.பல ஏற்ற தாழ்வுகள் கொண்டது தான் இந்த சமூகம். எல்லா தகுதியும்,திறமையும் இருந்தும் வசதி மட்டும் இல்லாத காரணத்தினால் அவர்கள் வாழ்க்கை மாற வேண்டுமா?. பன்னிரண்டு வருடம் படித்த மாணவன் வருமையின் காரணமாக கூலி வேலைக்கே செல்ல வேண்டுமா? என்ற கேள்விக்கு பதிலே அகரம்.2006ல் பேட்சில் இருந்த அகரம் 2010ல் விதையானது.அகரத்தில் தன்னார்வர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.குழந்தைகளின் திறனை கண்டறிந்து அதற்கேற்ப அவர்களை வழிநடத்துவதுதான் இந்த அகரத்தின் வேலை.2010ல் 160 மாணவர்களை கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.பணம் தேவையில்லை அன்பும் அக்கரையும் இருந்தாலே எல்லாத்தையும் மாற்ற முடியும் என்பதை இந்த அகரம் பயணம் உணர்த்தியது.வெள்ளி,சனி,ஞாயிறு போன்ற நாளை ஒதுக்கி சுயநலமின்றி இரண்டாயிரம் கிராமங்களை தேர்வு செய்து பின்தங்கிய மாணவர்களை தேர்வு செய்வது தன்னார்வர்களின் முக்கியத்துவமாக இருக்கிறது.அவர்கள் தான் அச்சாணியாக செயல்படுகின்றனர்.90சதவீதம் முதல் தலைமுறையினர்.60சதவீதம் பெண்கள்,40சதவீதம் ஆண்கள் உள்ளனர்.அன்பும் அக்கரையும் இருப்பவர்களால் மட்டுமே மாணவர்களை படிக்க வைக்க முடியும்.ஒரு குழந்தையை படிக்க வைத்தாலே அக்குடும்பத்தில் எல்லா குழந்தையும் படிக்கும் இது போன்ற மகிழ்ச்சியான அனுபவமும் உண்டு.அகரத்திற்கு வருடம் எட்டாயிரம் விண்ணப்பம் வந்தாலும் அதில் ஐநூறு பேர்களையே படிக்க வைக்க முடிகிறது.பன்னிரண்டாம் வகுப்பு படித்து விட்டு கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மற்ற மாநிலத்தை விட தமிழ்நாட்டில் 45சதவீதம் அதிகம் இந்தியா கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.இந்த புத்தகத்தை படித்தால் கண்டிப்பாக கண்கள் கலங்கும் மக்கள் என்ன வாழ்கை வாழ்கிறார்கள் என்பது புரியும்.யாராக இருந்தாலும் சரி அவர்கள் மூலம் ஒரு குழந்தையின் கல்வி மேற்கொள்ள படுகிறதோ அப்போது தான் அகரம் முழுமை அடையும்.பெற்றோர்களுக்கும்,ஆசிரி யர்களுக்கும் கல்வியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது.பல அரசு பள்ளிகளில் குழந்தைகள் ஆசிரியர் இல்லாமல் படித்துக்கொண்டு இருக்கிறார்கள்.அதை பற்றி வெளியில் பேசினால் மட்டுமே குறைகள் தீர்க்கப்படும்.இப்போது மாற்றத்தை கொண்டு வந்தால் மட்டுமே இந்தியாவை மாற்ற முடியும்.இலவச கல்வி என்று இருப்பதனால் சில மாணவர்களால் படிக்க முடிந்தது.மதியஉணவு என்ற திட்டத்தின் மூலம் உணவுக்காகவாது கல்வி கற்றார்கள்.இப்போது காணப்படும் கல்வியானது நடைமுறைக்கு சாதகம் இல்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது.உலகத்தை கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்றாக இருக்கிறது.நான் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை. மாணவர்களுக்காக கல்வி துறையில் இருப்பவர்கள் நல்லதே செய்ய வேண்டும்.கல்வி தரம் உயர வேண்டும்.மதிப்பெண்கலுக்காக மட்டுமே படிக்கும் நிலை மாற வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பக்க பலமாக இருக்க வேண்டும் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். நூலகம் இல்லாத ஊரில் கூட டாஸ்மாக் கடை உள்ளது. இந்த புத்தகம் இரண்டாயிரம் மாணவர்களின் வாழ்கையை மாற்றிய தன்னார்வலர்களின் சாட்சியாக அமைந்துள்ளது என்றார் சூர்யா. விழாவில் திரு.உதயசந்திரன் IAS பேசியது : நான் மிகவும் நேசிக்கும் இடம் என்றால் அது அண்ணா நூலகம் தான். இந்த நூலகத்தில் இது போன்று கூட்டம் நிறைந்து வழியாதா என ஏங்கி கழித்த இரவுகள் பல உண்டு.இப்போது கூட்டத்தை பார்க்கும் போது மனம் பட்டாம் பூச்சியாய் பறக்கிறது. இந்த வளாகம் புதுப்பித்ததற்கு நீதி அரசர் சந்துரு போன்றோர் காரணம். அன்பு நண்பர் சூர்யா நிறுவிய இந்த அகரம் நிகழ்ச்சியில் நான் தொடர்ந்து பங்கு கொள்கின்றேன்.பொன்மாலை பொழுதிலிருந்து இரவல் வாங்கும் நிலவொளியாக நான் இருக்க வேண்டும் என்ற எண்ணமும் எனக்கு உண்டு. இந்த நிறுவனத்தின் மூலமாக எப்படி மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பது மிக மிக முக்கியமான அம்சம். தாயை இழந்த சமூகத்தை பற்றி யோசித்தது இது போன்ற அகரம் மட்டும் தான். அகரம் செய்யும் செயல்களை அரசும் ஏற்று செய்ய வேண்டும் என்று கூறினால் மிகையாகாது.நான் கவனித்த ஒரு விஷியம் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்படுகிறார்கள்.அரசு கற்றுக்கொள்ள அகரம் நிறைய விதைகளை வைத்துள்ளது என்பதுதான் உண்மை.ரௌத்திரம் பழகு என்றால் சமூக அக்கறை இல்லா ஒருவனால் மாற்றத்தை உண்டாக்கிட முடியாது.ஒரு மாணவன் படிக்கும் போது சிக்கலான சம்பவத்தை எதிர்கொள்கிறான்.கல்லூரியில் படிக்கும் போது தன் தந்தைக்கு வணிக ரீதியிலான சிக்கல் வருகிறது அதனால் அவனால் கட்டணம் கட்ட முடியவில்லை மிக மிக கடினப்பட்டு தன் கல்லூரி படிப்பை முடிக்கின்றான்.அதன் பின் இன்னும் பல கஷ்டங்கள் பட்டு சமூகத்தில் முக்கியமான இடத்திற்கு வருகிறான்.அதன் பிறகு முற்காலத்தில் நடந்ததை நினைத்து பார்க்கிறான் தான் பட்ட கஷ்டங்களை நினைக்கும் போது கல்வி கடன் கேட்டு வங்கியை அனுகியபோது வங்கி மேலாளர் மறுக்கிறார்.தான் சமூகத்தில் முக்கிய இடம் வகிக்கும் போது தன் எதிரியை முடிவு செய்கிறான்.கல்வி கடன் என்பது முக்கியம் என கருதி அனைவருக்கும் கல்வி கடன் அளிக்கிறான் அது வேறு யாரும் இல்லை நான்தான்.ஒரே வாரத்தில் என் ஈரோடு மாவட்டத்தில் எட்டாயிரம் மாணவர்களுக்கு கல்வி கடன் கொடுக்க முடிந்தால் அதுதான் ரௌத்திரம் பழகு.அகரம் மூலம் ரௌத்திரம் பழகும் மாணவர்களும், இளைஞர்களும் சமூகத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என நம்புகிறேன் என்றார் திரு உதயசந்திரன் IAS.

இயக்குநர் எஸ்.எஸ். ...

இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் முக்கிய பாத்திரம் ஒன்றில் நடிக ...

Read More »

வந்தா ராஜாவாதான் வர ...

'AAA ' படத்தை தொடர்ந்து சிம்பு நடிப்பில் வெளிவந்த 'செக்க சிவந்த வானம்' திரைப்படம் வெற ...

Read More »

இளையதிலகம் பிரபு இண ...

மில்லியன் டாலர் மூவிஸ் சார்பாக K.கார்த்திக்கேயன் தயாரிக்கும் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் ...

Read More »

லக்ஷ்மி ராமகிருஷ்ணன ...

முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'! பன்முக திறமையாளர் லக ...

Read More »

மிஸ்டர் சந்திரமௌலி

கிரியேட்டிவ் மீடியா எண்டர்டெயினர்ஸ் உடன் இணைந்து பாஃப்டா மீடியா வொர்க்ஸ் சார்பில் தனஞ ...

Read More »

அசுரவதம்

7 ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் தயாரிப்பில் சசிகுமார், நந்திதா ஸ்வேதா நடிப்பில் மதுதுபாண்டி ...

Read More »

ஸ்ருதிஹாசன் தயாரிக் ...

ஸ்ருதிஹாசன் தயாரிக்கும் ‘த மஸ்கிட்டோ பிலாஸபி ’ தனது சொந்த நிறுவனமான இஸிட்ரோ மீடியா சா ...

Read More »

மகாத்மாவை பாதசாரிகள ...

***வீரத்துக்கு உதாரணம் டிராஃபிக் ராமசாமி : கமல்ஹாசன் பாராட்டு! ***மகாத்மாவை பாதசாரிகள ...

Read More »

வட சென்னை

தனுஷ் நடித்துள்ள " வட சென்னை " படத்தின் ட்ரைலர் ஜூலை 28 ஆம் தேதி வெளியாக உள்ளது. விசா ...

Read More »

நடிகர் ஷரண்

கோலிவுட்டில் வந்து பிறக்கும் இயக்குனர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். ஒவ்வொரு வாரமும் ...

Read More »

Company
: ABC cine gmbh
Contact person
: Balachandran
Email
Website
moserstrasse 24
CH-3014
Bern
Telephone
: +41 313324142
: +41 313313030
Mobile
: +41 793565617
Designed by Right Design. © 2016 cinemaabc.ch All rights reserved.