Booking
Back
Back
இளையதிலகம் பிரபு இணையும் புதிய படம்
18-07-2018
மில்லியன் டாலர் மூவிஸ் சார்பாக K.கார்த்திக்கேயன் தயாரிக்கும் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் இசக்கி பரத் - "இளையதிலகம்" பிரபு இணையும் புதிய படம் மில்லியன் டாலர் மூவிஸ் சார்பாக K.கார்த்திக்கேயன் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார். S.D.விஜய் மில்டன் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய "கோலி சோடா 2" படத்திலும், இயக்குனர் சமூத்திரகனி - சசிக்குமார் கூட்டணியில் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் "நாடோடிகள் 2" படத்தில் முக்கிய வேடத்திலும் நடித்துள்ள நடிகர் இசக்கி பரத் பெயரிடப்படாத இப்படத்தின் கதையின் நாயகனாக நடிக்கின்றார். இவருடன் முக்கிய வேடத்தில் "இளையதிலகம்" பிரபு நடிக்கிறார். இவர்களுடன் "நான் கடவுள்" ராஜேந்திரன், சித்ரா லட்சுமனன், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மேலும் முன்னனி கதாநாயகிகளுள் ஒருவர் இப்படத்தின் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும். இயக்குனர் விக்ரமனிடம் பல படங்களில் துணை/இணை இயக்குனராக பணியாற்றியவரும், கோலி சோடா 2 படத்தில் இணை இயக்குனராக பணியாற்றியவருமான ராமகிருஷ்ணன் இப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில், முன்னாள் சட்டத்துறை அமைச்சர் இசக்கி சுப்பையா கிளாப் அடிக்க, சிவாஜி பிலிம்ஸ் குமார் கேமரா ஆன் செய்ய, இயக்குனர் பாலாஜி சக்திவேல் இப்படத்தின் முதல் காட்சியை படமாக்கினார். சென்னை கடற்கரை அருகே இப்படத்திற்காக பிரம்மாண்டமாக ரெஸ்டாரண்ட் அரங்கம் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது. தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் தயாரிப்பு - K.கார்த்திக்கேயன் கதை திரைக்கதை வசனம் இயக்கம் - ராமகிருஷ்ணன் ஒளிப்பதிவு - பாண்டி குமார் இசை - அச்சு ராஜாமணி படத்தொகுப்பு - தீபக் சண்டைப்பயிற்சி - சுப்ரீம் சுந்தர் மக்கள் தொடர்பு - நிகில் புரோடக்ஷன் மேனேஜர் - சசி எக்சிகியுடிவ் புரோடுயுசர் - S.இசக்கி கிஷோர்

வெளியான அன்றே வீட்ட ...

நீண்டகால சேவைகளைப் (Jio Forever Plan) பெறுபவர்களுக்கு இலவச 4K LED டிவி, 4K செட்-அப் ப ...

Read More »

Hard Hitting and Aj ...

Nerkonda Paarvai, remake of Pink, a critically acclaimed social thriller film directe ...

Read More »

காப்பான்' ரிலீஸ் தள ...

என்.ஜி.கே' படம், வேறு படங்களின் ரிலீஸ் எனப் பல்வேறு காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி ...

Read More »

Nerkonda Paarvai

விஸ்வாசம் தல அஜித் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு திரைக்கு வந்தது. இப்படம் வரலாறு காணாத ...

Read More »

இயக்குநர் எஸ்.எஸ். ...

இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் முக்கிய பாத்திரம் ஒன்றில் நடிக ...

Read More »

வந்தா ராஜாவாதான் வர ...

'AAA ' படத்தை தொடர்ந்து சிம்பு நடிப்பில் வெளிவந்த 'செக்க சிவந்த வானம்' திரைப்படம் வெற ...

Read More »

இளையதிலகம் பிரபு இண ...

மில்லியன் டாலர் மூவிஸ் சார்பாக K.கார்த்திக்கேயன் தயாரிக்கும் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் ...

Read More »

லக்ஷ்மி ராமகிருஷ்ணன ...

முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'! பன்முக திறமையாளர் லக ...

Read More »

மிஸ்டர் சந்திரமௌலி

கிரியேட்டிவ் மீடியா எண்டர்டெயினர்ஸ் உடன் இணைந்து பாஃப்டா மீடியா வொர்க்ஸ் சார்பில் தனஞ ...

Read More »

அசுரவதம்

7 ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் தயாரிப்பில் சசிகுமார், நந்திதா ஸ்வேதா நடிப்பில் மதுதுபாண்டி ...

Read More »

Company
: ABC cine gmbh
Contact person
: Balachandran
Email
Website
moserstrasse 24
CH-3014
Bern
Telephone
: +41 313324142
: +41 313313030
Mobile
: +41 793565617
Designed by Right Design. © 2016 cinemaabc.ch All rights reserved.