Booking
Back
Back
செம ஷாக் அபிராமி
07-09-2019
`ராட்சசன்’ படத்தில் பள்ளிச் சிறுமி `அம்மு'வாக நடித்து கவனம் ஈர்த்தவர் அபிராமி. `ராட்சசன்’ படத்தின் ஸ்கூல் கேர்ள் இப்போது `அசுரன்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். `அசுரன்’ படத்தின் அனுபவங்கள் குறித்து அவரிடம் பேசினேன்.rnrn`அசுரன்’ வாய்ப்பு எப்படிக் கிடைத்தது?rn``தாணு சார் மூலமாத்தான் இந்த வாய்ப்பு கிடைச்சது. அவரோட தயாரிப்பில் ஏற்கெனவே `துப்பாக்கி முனை’ படத்தில் நான் நடிச்சிருந்தேன். அந்தப் படத்தைப் பார்த்துட்டு, `நீ நல்லா நடிக்கிற; உனக்கு சினிமாவுல நல்ல இடம் கிடைக்கும்’னு சொன்னார். பல பேர் பாராட்டிட்டு அப்படியே மறந்திடுவாங்க. ஆனால், தாணு சார் `அசுரன்’ படத்தில் ஒரு கேரக்டருக்கு நான் சரியா இருப்பேன்னு வெற்றிமாறன் சார்கிட்ட சொல்லியிருக்கார். அப்பறம் நான் வெற்றிமாறன் சாரைப் பார்த்தேன். லுக் டெஸ்ட் எடுத்துட்டு, உடம்பை குறைக்கச் சொன்னாங்க. நானும் 5 கிலோ எடையை குறைச்சிட்டு ரெடியா இருந்தேன். அதுக்கப்பறம் 6 மாசம் வரைக்கும் எந்தத் தகவலும் இல்லை. சரி வேற ஆளை கமிட் பண்ணியிருப்பாங்கனு நினைச்சேன். ஆனா, திடீர்னு ஒரு நாள் கால் பண்ணி, `இன்னைக்கு சாயங்காலம் ஷூட்டிங்’னு சொன்னாங்க. இப்படித்தான் `அசுர’னில் கமிட்டானேன்.’’rn`அசுரன்’ படத்தோட இசை வெளியீட்டு விழாவில், `இந்தப் பொண்ணு பயமே இல்லாமல் நடிச்சாங்க’னு தனுஷ் சொன்னப்ப எப்படி இருந்துச்சு?rnrn``தனுஷ் மாதிரி ஒரு பெரிய நடிகர் பக்கத்துல இருக்கும்போது பயமில்லாமல் இருக்குமா? உள்ளுக்குள்ள பயம் இருந்தது. ஆனால், அதை வெளிய காட்டக்கூடாதுல. அந்த இடத்துல நான் ஒரு நடிகை. என்னோட வேலை என்னவோ அதை சரியாப் பண்ணிடணும்னு நினைப்பேன். எங்களுக்கெல்லாம் பெரிய ரிகர்சல் ப்ராஸஸே போயிட்டு இருக்கும். தனுஷ் சார் டக்குனு வந்து, ஷாட்டை ஓகே பண்ணிடுவார். எங்களுக்கு அதிகமா டேக் போனதில்லை. ஷாட்ல என் பக்கத்துல இருக்கிறது தனுஷ் இல்லை; படத்தோட கேரக்டர்னு நினைச்சுப்பேன். அதுனால அந்த கேரக்டரைப் பார்த்தா எனக்கு பயம் இருக்காது. இப்படித்தான் பயமில்லாமல் நடிச்சேன். என் நடிப்பை தனுஷ் சார் பாராட்டினப்ப ரொம்ப பெருமையா இருந்துச்சு.’’rnrn`அசுரன்’ படத்துக்குப் பிறகு உங்க கரியர் எப்படி இருக்கணும்னு நினைக்கிறீங்க?rnrn``எந்தப் படம் பண்ணுனாலும் அதிலிருந்து என்ன கிடைக்கும்னு நினைச்சு பண்றது இல்லை. அந்த வேலையை அந்த நேரத்தில் சரியா செய்யணும்னு நினைப்பேன். `அசுரன்’ என் கரியரில் மிக முக்கியமான, பெரிய படம். `தனுஷ், வெற்றிமாறன், ஜீவி’ கூட்டணியில் ரொம்ப நாள் கழிச்சு ஒரு படம் உருவாகுது, அதுல நான் இருக்கேன்னு நினைக்கும்போதே எனக்கு பெருமையா இருக்கு. கண்டிப்பா என்னுடைய கேரக்டர் பேசப்படும். இதுக்கப்பறம் நிறைய பட வாய்ப்புகள் வரும்னு நம்புறேன்.’’

`பிகில்'

`பிகில்' படத்தின் மற்றொரு பாடல் வெளியிடப்பட்டுள்ளது!rnrnஅட்லி இயக்கத்தில் விஜய் நடித் ...

Read More »

மோடியின் அடுத்த பயோ ...

ஓமங்க் குமார் இயக்கத்தில் விவேக் ஓபராய் நடிப்பில் வெளியான படம் `பி.எம்.நரேந்திர மோடி' ...

Read More »

ஜெயலலிதா பயோபிக் சீ ...

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையைத் தழுவி வெப் சீரிஸ் இயக்கியுள்ளது கௌ ...

Read More »

இந்தியன் 2' அப்டேட் ...

இயக்குநர் ஷங்கருக்கும் தயாரிப்பாளருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பால் தடைபட்டிருந்த `இந்தியன ...

Read More »

மிரட்டும் `நெற்றிக் ...

`அறம்', 'டோரா', `கோலமாவு கோகிலா', `ஐரா' `கொலையுதிர் காலம்' படங்களைத் தொடர்ந்து இயக்கு ...

Read More »

Dabangg 3

Back in May, actor Kiccha Sudeep who reportedly plays the villain in Dabangg 3, share ...

Read More »

Saaho earns Rs 400 ...

Director Sujeeth’s Saaho starring Prabhas and Shraddha Kapoor in the lead continues t ...

Read More »

Shah Rukh Khan to c ...

According to the latest reports, Shah Rukh Khan is going to collaborate with filmmake ...

Read More »

Koffee With Karan: ...

Koffee with Karan's name appears in the popular small-screen chat show. This special ...

Read More »

சூர்யா - கெளதம் மேன ...

2003-ம் ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் சூர்யா - ஜோதிகா நடிப்பில் வெளியான படம், 'காக்க ...

Read More »

Company
: ABC cine gmbh
Contact person
: Balachandran
Email
Website
moserstrasse 24
CH-3014
Bern
Telephone
: +41 313324142
: +41 313313030
Mobile
: +41 793565617
Designed by Right Design. © 2016-2019 cinemaabc.ch All rights reserved.