Booking
Back
Back
எஸ்.ஜே.சூர்யா
24-09-2019
எல்லோருமே கஷ்டப்பட்டுத்தான் வேலை பார்க்கிறார்கள்; திறமைசாலிகளாகவும் இருக்கிறார்கள். ஆனால், சிலருக்கு மட்டும் வெற்றி கிடைக்க இரு காரணங்கள் உண்டு. ஒன்று பூர்வ ஜென்ம புண்ணியங்கள். மற்றொன்று நமக்குக் கிடைத்த வெற்றியை மற்றவரோடு எந்தளவுக்குப் பகிர்ந்துகொண்டோம் என்பது. rnகுஷி', `வாலி' படங்களின் மூலமாகத் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா. பின்னர் 'நியூ' படத்தின் மூலமாகக் கதாநாயகனாகவும் அறிமுகமானவர், 'இறைவி' படத்தின் மூலமாக குணச்சித்திர வேடங்களில் கலக்கினார். சமீபத்தில் வெளியான 'மான்ஸ்டர்' படம் மூலம் குழந்தைகளின் மனதிலும் இடம் பிடித்தார். செப்டம்பர் 22-ம் தேதி சென்னை தேனாம்பேட்டையிலுள்ள தனியார் புற்றுநோய் மருத்துவமனையில் `ரோஜா தினம்’ அனுசரிக்கப்பட்டது. இந்த தினத்தையொட்டி மருத்துவமனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோருக்கு ரோஜாப்பூ கொடுத்து நம்பிக்கை அளித்தார். அதையொட்டி நமக்கு அளித்த சிறப்புப் பேட்டி இது. rnஉங்கள் வாழ்க்கையை மாற்றிய வாக்கியம் எது?rnrn```நீ எதைக் கொடுத்தாயோ அதுதான் உனக்குத் திரும்பக் கிடைக்கும்’ இதுதான் என்னுடைய வாழ்க்கையை மாற்றிய வாக்கியம். வாழ்க்கையில் சோதனைகளும் வேதனைகளும் வரத்தான் செய்யும். அவற்றை எதிர்கொள்ளப் பழக வேண்டும். அப்படிச் செயல்படும்போதுதான் வெற்றி கிடைக்கும். சிறிய கஷ்டங்கள் வந்தபோது அவற்றை எதிர்கொண்டு போராடினேன். அப்போது எனக்குச் சிறிய வெற்றி கிடைத்தது. இன்னும் பெரிய கஷ்டம் வரும்போது அவற்றை எதிர்த்துப் போராடினால் இன்னும் பெரிய வெற்றி கிடைக்கும். சினிமா, விளையாட்டு, மருத்துவம் என எல்லாவற்றுக்கும் இது பொருந்தும்!rnஆன்மிகத்தில் ஈடுபாடு உண்டா?rnrnஎல்லோருமே கஷ்டப்பட்டுத்தான் வேலை பார்க்கிறார்கள்; திறமைசாலிகளாகவும் இருக்கிறார்கள். ஆனால், சிலருக்கு மட்டும் வெற்றி கிடைக்க இரு காரணங்கள் உண்டு. ஒன்று பூர்வ ஜென்ம புண்ணியங்கள்; மற்றொன்று நமக்குக் கிடைத்த வெற்றியை மற்றவரோடு எந்தளவிற்குப் பகிர்ந்துகொண்டோம் என்பது. இந்த இரண்டிலிருந்தே ஒருவருக்கு வெற்றி என்பது அமைகிறது. திறமை, உழைப்புக்கெல்லாம் அப்பாற்பட்டு மனமும் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறது. அந்த மனமே ஆன்மிகம்.. எனது ஆன்மிகமும் அதுதான்! rnஉடம்பை ஃபிட்டாக வைத்திருப்பதற்குக் காரணம் மனம்தான். ஏதாவது பிரச்னை வரும்போது அதனால் ஏற்படும் மன அழுத்தத்தில் சிக்கி, வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்காமல் ஜிம்முக்குப் போய் உடற்பயிற்சி செய்வேன். அப்படிச் செய்வதால் மன அழுத்தம் நீங்கி, உடலும் உறுதியாகிவிடும்.rnதினசரி உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறேன். உடலுக்கு மட்டுமல்ல உள்ளத்துக்கும் பயிற்சி தேவை என்றே நினைக்கிறேன். அப்படிச் செய்யும்போது ஆரோக்கியமான உடல்நலனைப் பெற முடியும்.rnஉணவுப்பழக்கத்தை கடைப்பிடிக்கிறீர்களா?rnrnஉடல் ஆரோக்கியத்துக்கு உணவுப்பழக்கத்தில் கவனம் செலுத்துவது ரொம்ப முக்கியம். புரதச்சத்துகள், ஊட்டச்சத்துகள், நார்ச்சத்துகள் நிறைந்த உணவுகளைத் தேவையான அளவுக்குச் சாப்பிடுவேன். பொதுவாக எந்த உணவையும் அளவாக எடுத்துக்கொள்வது நல்லது. அதே சமயத்தில் அளவு குறைவாக உட்கொள்வதையும் தவிர்க்க வேண்டும். அதைத்தான் நம் முன்னோர்கள் `சுவரின்றி சித்திரம் வரைய முடியாது’ என்று குறிப்பால் உணர்த்தினார்கள். அது எல்லாக் காலத்துக்கும் பொருந்தும். எல்லோரும் உடம்பையும் மனதையும் நன்றாக வைத்துக்கொள்ளுங்கள்.. சந்தோஷமாக வாழுங்கள்!” என்கிறார் எஸ்.ஜே.சூர்யா.

Vijay's 'Bigil' bec ...

The trailer of Tamil film Bigil, directed by Atlee, was a highly anticipated one and ...

Read More »

Record breaking Vi ...

Actor Vijay will be seen next on screen with Bigil which is directed by Atlee, and th ...

Read More »

சசிகுமாரின் `தனி ஒர ...

சினிமாவில் ஒருவருக்கு எப்போது நல்லநேரம் வந்து, செல்வம் கொட்டும் என்று யாருக்கும் தெரி ...

Read More »

இந்தியன்-2' படத்தை ...

லைகா, 2014-ம் ஆண்டிலிருந்து திரைப்படங்கள் தயாரித்துவருகிறது. புதிய நிறுவனம் என்பதால், ...

Read More »

விஜய் 64 அப்டேட்ஸ்!

லோகேஷ் கனகராஜ் இயக்கும் விஜய் 64 படத்துக்கான பரபரப்பு கூடிக்கொண்டே போகிறது. காஸ்ட்டிங ...

Read More »

எஸ்.ஜே.சூர்யா

எல்லோருமே கஷ்டப்பட்டுத்தான் வேலை பார்க்கிறார்கள்; திறமைசாலிகளாகவும் இருக்கிறார்கள். ஆ ...

Read More »

கோமாளி’ பட இயக்குநர ...

தொடர் படத் தோல்விகளைச் சந்தித்துவருவதால், இனி நடிக்கும் படங்களை மிகக் கவனமாகத் தேர்ந் ...

Read More »

`பிகில்'

`பிகில்' படத்தின் மற்றொரு பாடல் வெளியிடப்பட்டுள்ளது!rnrnஅட்லி இயக்கத்தில் விஜய் நடித் ...

Read More »

மோடியின் அடுத்த பயோ ...

ஓமங்க் குமார் இயக்கத்தில் விவேக் ஓபராய் நடிப்பில் வெளியான படம் `பி.எம்.நரேந்திர மோடி' ...

Read More »

ஜெயலலிதா பயோபிக் சீ ...

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையைத் தழுவி வெப் சீரிஸ் இயக்கியுள்ளது கௌ ...

Read More »

Company
: ABC cine gmbh
Contact person
: Balachandran
Email
Website
moserstrasse 24
CH-3014
Bern
Telephone
: +41 313324142
: +41 313313030
Mobile
: +41 793565617
Designed by Right Design. © 2016-2019 cinemaabc.ch All rights reserved.