Booking
Back
Back
`இந்தியாவில் ஆசிட் வாங்குவது எவ்வளவு ஈஸி தெரியுமா
21-01-2020
தீபிகா படுகோன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம், 'சபாக்'. இதை, எழுத்தாளர் மற்றும் இயக்குநர் மேக்னா குல்சார் இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படம், ஆசிட் தாக்குதலில் உயிர்பிழைத்த லட்சுமி அகர்வால் என்ற பெண்ணின் உண்மைக் கதையை மையக்கருவாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து, தீபிகா மற்றும் `சபாக்' படக்குழுவினர், ஆசிட் வீச்சு பற்றிய விழிப்புணர்வு வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இந்தியாவில் ஆசிட் வாங்குவது எவ்வளவு எளிது என்பதை உணர்த்தும் வகையில் இந்த வீடியோ அமைந்திருக்கிறது .rnrnஇதில், திரைப்படக் குழுவினர் சிலர் வெவ்வேறு கடைகளுக்கு ஆசிட் வாங்கச் செல்கின்றனர். இதைக் காரில் இருந்தவாறு தீபிகா மற்றும் இரண்டு ஒளிப்பதிவாளர்கள் கண்காணிக்கின்றனர். இந்தக் காணொளியில், ஒவ்வொருவரும் வெவ்வேறு கடைகளுக்குச் சென்று ஆசிட் கேட்பதோடு, `அதனால் தோலுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா?' என்றும் கேட்கின்றனர். இந்தக் காணொளியில், ஒரே ஒரு கடையின் உரிமையாளர் மட்டுமே, `அடையாள அட்டை காண்பித்தால்தான் ஆசிட் வாங்க முடியும்' எனக் கூறுகிறார். ஒரு பெண் உரிமையாளர், `ஆசிட் மற்றவர்கள் மீது வீசுவதற்காக வாங்கப்படுகிறதா?' என்று சர்வசாதாரணமாகக் கேட்கிறார். மேலும், திரைப்படக் குழுவைச் சேர்ந்த ஒரு நடிகர், ஆசிட் வாங்குவதற்கான காரணத்தையும் கூறுகிறார். இதற்குக் கடை உரிமையாளர், `ஆசிட்டை மற்றவர்கள்மீது வீசப் பயன்படுத்த வேண்டாம்' என்று கூறிவிட்டு விற்கிறார்.இந்த வீடியோவின் இறுதியில் தீபிகா படுகோன், 24 ஆசிட் பாட்டில்கள் மொத்தமாக வாங்கப்பட்டதாகத் தெரிவிக்கிறார். இத்தனைக்கும் இந்தியாவில் ஆசிட் வாங்குவதற்கு என விதிமுறைகள் அமலில் உள்ளது.rnrnஇதைப் பற்றி தீபிகா கூறுகையில், "ஆசிட் விற்கப்படுவதால்தான் ஆசிட் வீச்சு நடக்கிறது. ஆசிட் வீச்சைத் தடுக்கவேண்டியது கடை உரிமையாளர்களின் கடமை மட்டுமல்ல. நாம் அனைவருமே சட்டவிரோதமாக ஆசிட் வாங்கப்படுவதை அறிந்தால் உடனடியாக காவல்துறைக்குத் தெரிவிக்க வேண்டும்" என்றார்.rnrnஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் சேர்ந்து, ஆசிட் விற்பதற்கான விதிமுறைகளைத் தெரிவிப்பதோடு வீடியோ முடிவடைகிறது.

நான் முஸ்லிம், மனைவ ...

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஷாருக் கான் மதம் குறித்த தனது நிலை ...

Read More »

கிராமி விருது விழாவ ...

டீப் V நெக்லைன் டிசைன்தான் இந்த கவுனின் ஹைலைட். மேலும், பெல்லி பட்டனில் பிரியங்கா சோப ...

Read More »

மீண்டும் விஜய் - அட ...

விஜய், விஜய் சேதுபதி என இருவருக்குமான சம்பளமே பல கோடிகள் எனக் கிசுகிசுக்கிறது கோலிவுட ...

Read More »

`சூரரைப் போற்று'னு ...

`இறுதிச்சுற்று’ படம் மூலம் மாதவனின் இரண்டாம் சுற்றை ஆரம்பித்து வைத்த இயக்குநர் சுதா க ...

Read More »

மூன்று மாதங்களுக்கு ...

நேர்கொண்ட பார்வை படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குனர் ஹெச்.வினோத் மற்றும் அஜி ...

Read More »

தல பிறந்தநாளில் களம ...

ரெமோ படத்தினை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துக் கொண்டிருக்கும் ...

Read More »

மாஸ்டர் திரைப்படத்த ...

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் திரைப்படம் ...

Read More »

`இந்தியாவில் ஆசிட் ...

தீபிகா படுகோன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம், 'சபாக்'. இதை, எழுத்தாளர் மற்ற ...

Read More »

உறவும் பிரிவும் நிற ...

உலகப் பொருளாதார அமைப்பு 2020-ம் ஆண்டுக்கான கிரிஸ்டல் விருது விழாவை ஸ்விட்சர்லாந்தின் ...

Read More »

ஜெயம் ரவியின் அடுத் ...

நடிகர் ஜெயம் ரவி நடித்த ’கோமாளி’ திரைப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின ...

Read More »

Company
: ABC cine gmbh
Contact person
: Balachandran
Email
Website
moserstrasse 24
CH-3014
Bern
Telephone
: +41 313324142
: +41 313313030
Mobile
: +41 793565617
Designed by Right Design. © 2016-2020 cinemaabc.ch All rights reserved.