Booking
Back
Back
மீண்டும் விஜய் - அட்லி காம்போ?
31-01-2020
விஜய், விஜய் சேதுபதி என இருவருக்குமான சம்பளமே பல கோடிகள் எனக் கிசுகிசுக்கிறது கோலிவுட் வட்டாரம். இதன் காரணமாக, தயாரிப்பாளருக்கு அதிக செலவு வைக்காமல் படப்பிடிப்பை நடத்திவருகிறார் லோகேஷ் கனகராஜ். இதைத் தயாரிப்பாளர் தரப்பும், விஜய்யும் ஆச்சர்யமாகப் பார்த்துவருகிறார்கள்.rn`மாநகரம்' இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துக்கொண்டிருக்கும் படம், `மாஸ்டர்'. படத்தின் வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதி, இப்படத்தின்மூலம் முதன்முறையாக விஜய்யோடு கைகோத்திருக்கிறார். விஜய், விஜய் சேதுபதி என இருவருக்குமான சம்பளமே பல கோடிகள் எனக் கிசுகிசுக்கிறது கோலிவுட் வட்டாரம். இதன் காரணமாக, தயாரிப்பாளருக்கு அதிக செலவு வைக்காமல் படப்பிடிப்பை நடத்திவருகிறார் லோகேஷ் கனகராஜ். இதைத் தயாரிப்பாளர் தரப்பும், விஜய்யும் ஆச்சர்யமாகப் பார்த்துவருகிறார்கள்.rnrnசென்னையில், `மாஸ்டர்' படத்துக்கான ஜெயில் செட் போடுவதற்கு 30 கோடி செலவாகும் என ஆர்ட் டைரக்டர் சொல்ல, `செட்டே வேண்டாம் லைவ் லொக்கேஷன் போய்விடலாம்' எனச் சொல்லி, மொத்த படக்குழுவையும் கர்நாடக மாநிலம் ஷிமோகாவுக்கு அழைத்துச்சென்றார் லோகேஷ். அங்கேதான் விஜய்யும் விஜய் சேதுபதியும் மோதும் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. விஜய்-யின் கல்லூரி போர்ஷன்களை முதலில் டெல்லியிலும், அதன் தொடர்ச்சியான சில காட்சிகளை சென்னை அம்பத்தூரில் உள்ள கல்லூரியிலும் படமாக்கினர். இதைத் தொடர்ந்து, `மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பு, தற்போது சென்னை பனையூரில் நடைபெற்றுவருகிறது.rnஇதற்கிடையே, `சர்கார்' படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே தன்னுடைய அடுத்த படத்துக்கான கால்ஷீட்டை சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்குக் கொடுத்துவிட்டார் விஜய்.rnrn`பிகில்', `மாஸ்டர்' எனத் தொடர்ந்து ஆக்‌ஷன் படங்களில் நடித்துவரும் விஜய்-க்கு, குடும்பத்துடன்கூடிய ஒரு கூலான `விஸ்வாசம்' போன்ற கிராமத்து சப்ஜெக்ட்டில் நடிக்க ஆசை. இயக்குநர் சிவாவுக்கும் விஜய்-க்கும் சொந்த வீடு சென்னை சாலிகிராமத்தில் இருந்ததால், இருவருமே சிறு வயது முதல் குடும்ப நண்பர்கள். சிவா இயக்கத்தில் வெளிவரும் ஒவ்வொரு படத்துக்கும் போனில் அழைத்து பாராட்டி வரும் விஜய், பழைய நட்பை இன்றுவரை தொடர்ந்துவருகிறார். தற்போது, சிவா இயக்கத்தில் ரஜினி நடித்துக்கொண்டிருப்பதால், விஜய்யை சிவா இயக்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. இன்னொரு பக்கம் `கடைக்குட்டி சிங்கம்', `நம்ம வீட்டுப் பிள்ளை' எனப் பக்கா கமர்ஷியல் கிராமத்துப் படங்களை இயக்கி கலக்கிவருகிறார் பாண்டிராஜ். விஜய் விரும்பும் கிராமத்துக் கதையை பாண்டிராஜ் அவரிடம் சொல்ல, உடனே ஓகே சொலிவிட்டாராம். அதைத் தொடர்ந்து, தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடமும் கதையைச் சொல்லிவிட்டார் பாண்டிராஜ்.rn`ஒரு படத்துக்கு, திட்டமிடும் பட்ஜெட்டைவிட அதிகப்படியான கோடிகளைச் செலவுசெய்யும் இயக்குநர்' என்ற பெயரைச் சம்பாதித்திருக்கிறார் அட்லி. இந்தப் பிரச்னை, `பிகில்' படத்தின்போது இன்னும் பூதாகரமாக, தயாரிப்பாளரும் அவரிடம் சில பல கேள்விகளைக் கேட்டிருக்கின்றார். அப்போது, ``இந்தப் படத்தின் பட்ஜெட் அதிகமாக நான் காரணம் இல்லை. உங்க புரொடக்‌ஷன் மேனேஜர்தான்'' என்று சொல்லியிருக்கிறார் அட்லி. தற்போது, ஷாருக்கானை வைத்து இயக்கும் பாலிவுட் பட வேலைகளில் மும்மரமாகப் பணியாற்றிவருகிறார் அட்லி. இந்தச் சூழலில், விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் இயக்கும் படத்தை அட்லிதான் இயக்கப்போகிறார் என்கிறார்கள், தயாரிப்பு தரப்புக்கு நெருக்கமானவர்கள்.rnஷாருக்கானை இயக்கும் படம் ஒருவேளை தள்ளிப்போனால், இந்தப் படத்தின் வேலைகளை அதற்குள் முடித்துக் கொடுக்கும்படி அட்லி-யிடம் கேட்டிருக்கிறார்களாம். ஆனால், `பிகில்' படத்துக்காக ஏகப்பட்ட நாள்களை வீணாக்கியதால், அட்லி மீது ஆதங்கத்தில் இருக்கிறாராம் விஜய். இதனால் இருவரும் மீண்டும் இணைவார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

``கொடுத்த `கலைஞர்\\ ...

எம்.ஆர்.ராதா திராவிடத்தை ஆதரித்தார், நீங்கள் எதிர்த்து பேசுகிறீர்களே?rnrn``என் அப்பா ...

Read More »

கமல்ஹாசன் vs லைக்கா ...

`இந்தியன் -2' படப்பிடிப்பு ஆரம்பித்ததில் இருந்தே கமல்ஹாசனுக்கும் லைக்கா நிறுவனத்துக்க ...

Read More »

விஜய்யை இயக்கப்போகு ...

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் `மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பு, இறுதிக ...

Read More »

நான் முஸ்லிம், மனைவ ...

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஷாருக் கான் மதம் குறித்த தனது நிலை ...

Read More »

கிராமி விருது விழாவ ...

டீப் V நெக்லைன் டிசைன்தான் இந்த கவுனின் ஹைலைட். மேலும், பெல்லி பட்டனில் பிரியங்கா சோப ...

Read More »

மீண்டும் விஜய் - அட ...

விஜய், விஜய் சேதுபதி என இருவருக்குமான சம்பளமே பல கோடிகள் எனக் கிசுகிசுக்கிறது கோலிவுட ...

Read More »

`சூரரைப் போற்று'னு ...

`இறுதிச்சுற்று’ படம் மூலம் மாதவனின் இரண்டாம் சுற்றை ஆரம்பித்து வைத்த இயக்குநர் சுதா க ...

Read More »

மூன்று மாதங்களுக்கு ...

நேர்கொண்ட பார்வை படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குனர் ஹெச்.வினோத் மற்றும் அஜி ...

Read More »

தல பிறந்தநாளில் களம ...

ரெமோ படத்தினை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துக் கொண்டிருக்கும் ...

Read More »

மாஸ்டர் திரைப்படத்த ...

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் திரைப்படம் ...

Read More »

Company
: ABC cine gmbh
Contact person
: Balachandran
Email
Website
moserstrasse 24
CH-3014
Bern
Telephone
: +41 313324142
: +41 313313030
Mobile
: +41 793565617
Designed by Right Design. © 2016-2020 cinemaabc.ch All rights reserved.