Booking
Back
Back
விஜய்யை இயக்கப்போகும் முதல் பெண் இயக்குநர்... `விஜய் 65' அப்டேட்!
20-02-2020
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் `மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பு, இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. இதற்கிடையே, விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப்போகும் இயக்குநர் யார் என்கிற பரபர போட்டி கோலிவுட்டில் நிலவிக்கொண்டிருந்த நிலையில், சஸ்பென்ஸுக்கு இன்று விடை சொல்கிறது விகடன்.rnrn'விஜய் 65' படத்தை இயக்கப்போகும் இயக்குநர் சுதா கொங்கரா. இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சுதா... மாதவன், ரித்திகா சிங் நடித்த 'இறுதிச்சுற்று' படத்தின் மூலம் கவனம் ஈர்த்தார். இந்தப் படத்துக்கு அடுத்தபடியாக, சூர்யா இயக்கத்தில் 'சூரரைப் போற்று' படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இந்தப் படம் ஏப்ரல் மாதம் ரிலீஸுக்குத் தயாராகியிருக்கும் நிலையில்தான், விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு சுதாவுக்கு கிடைத்திருக்கிறது. இதன்மூலம் தமிழில் ஒரு மாஸ் ஹீரோவை இயக்கும் முதல் பெண் இயக்குநராகியிருக்கிறார் சுதா.rnவிஜய் 65 படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் என்பது முதலிலேயே முடிவுசெய்யப்பட்டது. இயக்குநர் யார் என்பதில்தான் இவ்வளவு நாள்களாக இவரா, அவரா என சஸ்பென்ஸ் நீடித்தது. முதலில், வெற்றிமாறன் சொன்ன கதை விஜய்க்குப் பிடித்துப்போக, சன் பிக்சர்ஸும் ஹேப்பியானது. ஆனால் 'சூரி' படம், அடுத்து சூர்யா படம் என இரண்டையும் முடித்தபிறகுதான் விஜய்-க்கு படம் பண்ண முடியும் என வெற்றிமாறன் சொன்னதால் அந்தத் திட்டம் கேன்சலானது.rnஇயக்குநர் பாண்டிராஜிடம் கதை கேட்டார். விஜய்க்கு கதை மிகவும் பிடித்திருந்தது. ஆனால் தயாரிப்பு தரப்போ, பெரிய பட்ஜெட்டில் படம் பண்ணலாம் எனச் சொல்ல, பாண்டிராஜ் வெளியேறினார். அடுத்து, கார்த்திக் சுப்புராஜிடம் கதை கேட்டார் விஜய். அதுவும் டேக் ஆஃப் ஆகவில்லை. இதற்கு அடுத்தபடியாக, சுதா கொங்கராவிடம் கதை கேட்ட சன் பிக்சர்ஸ், அவரை விஜய்-யிடம் கதை சொல்ல அனுப்பியிருக்கிறது. விஜய் -க்கு கதை பிடித்துவிட்டது. ஆனால், உடனே ஓகே சொல்லவில்லை. லோகேஷ் கனகராஜிடம் கடைபிடித்த அதே ஃபார்முலாவை சுதாவிடமும் சொல்லியிருக்கிறார். ஆமாம், லோகேஷ் கனகராஜ் படத்துக்கு ஓகே சொல்லும்முன், ரிலீஸாகாத 'கைதி'யைப் பார்த்துவிட்டு இறுதிசெய்கிறேன் என்று சொன்னார் விஜய். அப்படியே 'கைதி' படத்தைப் பார்த்துவிட்டுத்தான் எல்லாம் ஒகே ஆனது. அதேபோல 'சூரரைப் போற்று' படத்தைப் பார்க்க வேண்டும் என சொல்லியிருக்கிறார் விஜய்.விஜய்-க்கென ஸ்பெஷல் ஷோ தயாராகியிருக்கிறது. விஜய்-யுடன் படம் பார்க்காமல் வெளியிலேயே டென்ஷனாகக் காத்திருந்திருக்கிறார் சுதா. படத்தை முழுவதுமாகப் பார்த்து முடித்து, புன்னகை பூத்தபடி வெளியில் வந்த விஜய், 'சன் பிக்சர்ஸ் படத்துல நாம ரெண்டுபேரும் சேர்ந்து வொர்க் பண்றோம்' என்று சந்தோஷமாக சுதாவிடம் கைகுலுக்கியிருக்கிறார்.தற்போது விஜய் நடித்துவரும் ' மாஸ்டர்' திரைப்படத்தில், அனிருத் இசையமைத்துவருகிறார். அனிருத்தின் வொர்க்கிங் ஸ்டைல் மிகவும் பிடித்திருப்பதால், தொடர்ந்து அனிருத்துடன் பல படங்கள் விஜய் பண்ணுவார் என எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால், விஜய் 65 படத்தின் இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ். இவர்தான் 'சூரரைப் போற்று' படத்துக்கும் இசையமைப்பாளர்.rnrnவிஜய், சுதா, ஜீ.வி.பிரகாஷ் மூவருக்கும் அட்வான்ஸ் கொடுத்து புராஜெக்ட்டை உறுதிசெய்திருக்கிறது, சன் பிக்சர்ஸ்!

``கொடுத்த `கலைஞர்\\ ...

எம்.ஆர்.ராதா திராவிடத்தை ஆதரித்தார், நீங்கள் எதிர்த்து பேசுகிறீர்களே?rnrn``என் அப்பா ...

Read More »

கமல்ஹாசன் vs லைக்கா ...

`இந்தியன் -2' படப்பிடிப்பு ஆரம்பித்ததில் இருந்தே கமல்ஹாசனுக்கும் லைக்கா நிறுவனத்துக்க ...

Read More »

விஜய்யை இயக்கப்போகு ...

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் `மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பு, இறுதிக ...

Read More »

நான் முஸ்லிம், மனைவ ...

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஷாருக் கான் மதம் குறித்த தனது நிலை ...

Read More »

கிராமி விருது விழாவ ...

டீப் V நெக்லைன் டிசைன்தான் இந்த கவுனின் ஹைலைட். மேலும், பெல்லி பட்டனில் பிரியங்கா சோப ...

Read More »

மீண்டும் விஜய் - அட ...

விஜய், விஜய் சேதுபதி என இருவருக்குமான சம்பளமே பல கோடிகள் எனக் கிசுகிசுக்கிறது கோலிவுட ...

Read More »

`சூரரைப் போற்று'னு ...

`இறுதிச்சுற்று’ படம் மூலம் மாதவனின் இரண்டாம் சுற்றை ஆரம்பித்து வைத்த இயக்குநர் சுதா க ...

Read More »

மூன்று மாதங்களுக்கு ...

நேர்கொண்ட பார்வை படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குனர் ஹெச்.வினோத் மற்றும் அஜி ...

Read More »

தல பிறந்தநாளில் களம ...

ரெமோ படத்தினை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துக் கொண்டிருக்கும் ...

Read More »

மாஸ்டர் திரைப்படத்த ...

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் திரைப்படம் ...

Read More »

Company
: ABC cine gmbh
Contact person
: Balachandran
Email
Website
moserstrasse 24
CH-3014
Bern
Telephone
: +41 313324142
: +41 313313030
Mobile
: +41 793565617
Designed by Right Design. © 2016-2020 cinemaabc.ch All rights reserved.